தமிழ்நாடு

யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு தள்ளுபடி

15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

ஆவடி: 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களைப் புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி ரூ. 44 லட்சம் மோசடி செய்த பாஜகவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு இருந்தது

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக இருப்பவர் தா.அரவிந்தன். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: 

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, சபி நகர், 3 ஆவது தெரு சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத் (33). இவர் இளைய பாரதம் என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளம் நடத்தி வருகிறார். இவர் மிலாப் ஃபண்ட் ரைசேர் சைட் என்ற தளம் மூலமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் நிதி திரட்டியுள்ளார். இதற்கு அவர் இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. 

மேலும், கார்த்திக் கோபிநாத் அந்தப் பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  

இதனையடுத்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்தி கோபிநாத்தை தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீஸார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

அநீதி, அராஜகம்....திமுக பற்றிய விஜய்யின் திருக்குறள்! | TVK 3rd year anniversary

வேல்முருகனின் பாடலுக்கு விஜய் நடனம்! | TVK 3rd year anniversary

மதுரா: பள்ளி மாணவர்களை தொழுகை செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT