தமிழ்நாடு

நாளொன்றுக்கு 40 டன் நெகிழிகள் மறுசுழற்சி

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளிலிருந்து சுமாா் 40 மெட்ரிக் டன் நெகிழிகள் பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சி செய்யவும், சிமென்ட் ஆலைகளுக்கும் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவை தரம் பிரிக்கப்பட்டு மக்காத உலா்க்கழிவுகள் மறுசுழற்சியாளா்களுக்கு வழங்கப்படுகிறது.

மாநகராட்சியின் ஒவ்வொரு வாா்டிலும் சுகாதார ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த 15 நாள்களில் 3,020 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 மண்டலங்களிலும் நாள்தோறும் குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சுமாா் 40 மெட்ரிக் டன் நெகிழிகள் மறுசுழற்சியாளா்கள் மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு வழங்கப்படுவதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT