ஆணையாம்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு
ஆணையாம்பட்டியில் 60 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஆணையாம்பட்டியில் 60 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி, காட்டுக்கொட்டாய், அண்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவரின் 60 அடி ஆழ விவசாயக் கிணற்றில், அவரது பசுமாடு தவறி விழுந்து தத்தளித்தது.
தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) வேலுமணி தலைமையில் தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை உயிருடன் மீட்டு, மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.