வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 
தமிழ்நாடு

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒருதலைபட்சமானது' - போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி (விடியோ)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமானது என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் குற்றம்ச்சாட்டியுள்ளார். 

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒருதலைபட்சமானது என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் குற்றம்ச்சாட்டியுள்ளார். 

தூத்துக்குடியில் 22.5.2018-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கனாது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இறுதி குற்றப்பத்திரிகையில் 101 பேரில் ஏற்கனவே 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இன்று 74 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 64 பேர் மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்பாக நேரில் ஆஜராகினர்.

இதனையடுத்து வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட 64 பேரும் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட பின்னர் வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் பேசுகையில், சிபிஐ விசாரணை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமானது எனவும், குற்றப்பத்திரிக்கையில் காவல்துறையினரின் பெயர் இடம்பெறாமல் போராடிய பொதுமக்களை குற்றவாளிகளாக மாற்றியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும், துப்பாக்கிச்சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ அறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

Indian Racing திருவிழா 2025 தொடங்கியது! நடிகர் நாகசைதன்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT