ஏற்காட்டில் களைகட்டிய படகுப் போட்டி: சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு
ஏற்காடு கோடை விழாவையொட்டி களைகட்டிய படகுப்போட்டி சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம்: ஏற்காடு கோடை விழாவையொட்டி களைகட்டிய படகுப்போட்டி சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 45வது கோடை விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
குறிப்பாக அண்ணா பூங்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஜா பூக்கள், நாய்கள் கண்காட்சி பெண்களுக்கான சமையல் போட்டி கொழு கொழு குழந்தைகள் போட்டி என பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான படகுப் போட்டி நேற்று நடைபெற்றது போட்டியில் பங்கேற்க காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் குவிந்தனர். ஒற்றையர் இரட்டையர் மற்றும் குழுவினர் என்ன பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. முதலில் 10 படகுகள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஏரியை வலம்வந்து முதல் பரிசையும் தட்டிச் சென்றனர்.
முதலிடம் பெற்றவர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த படகுப் போட்டியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதனிடையே கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று முடிவடைகிறது. இன்று மாலை மாவட்ட ஆட்சியர் கோடை விழாவை சிறப்பாக நடத்த உதவிய அரசு துறைகள் தனியார் துறையை சார்ந்தவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிக்க உள்ளார்.
கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கோடை விழாவில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலத்திலிருந்து ஏற்காட்டில் இயற்கை அழகை ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.