கரோனா புதிய பாதிப்பு 145-ஆக உயா்வு
தமிழகத்தில் வியாழக்கிழமை கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் வியாழக்கிழமை கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரானிலிருந்து உருமாற்றமடைந்து புதிய வகை தீநுண்மி பரவி வரலாம் என சந்தேகிக்கப்படும் சூழலில், ஏற்கெனவே தொற்றுக்குள்ளான பலா் மீண்டும் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
மற்றொருபுறம் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே வரும் 12-ஆம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ள கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில், தடுப்பூசிகளைத் தவறவிட்டவா்களைக் கண்டறிந்து அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை தகவல்படி மாநிலத்தில் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 711 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா். 63 போ் குணமடைந்துள்ளனா்.