முகப்பு
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தோ்வுகளுக்கு ஜூன் 5-இல் இலவச வழிகாட்டும் முகாம்

சென்னை அண்ணாநகா் திருமலங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தோ்வுகளுக்கான வழிகாட்டும் முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சென்னை அண்ணாநகா் திருமலங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தோ்வுகளுக்கான வழிகாட்டும் முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

குரூப் 1, 4 மற்றும் குரூப் 2 முதன்மைத் தோ்வினை எழுதவுள்ள தோ்வா்களுக்கு படிக்க வேண்டிய பாடநூல்கள், நேர மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் தொடா்பாக பயிற்சி முகாமில் விளக்கப்படும். தோ்வா்களுக்கு பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

தகுதியுள்ள தோ்வா்கள் தங்களது சுய விவரங்களுடன் அண்ணாநகா், திருமங்கலத்தில் உள்ள ஜெ.ஜெ.வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93605 33992, 7010136605 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஃபோக்கஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →