தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

DIN

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து, பழம்பெரும் இயக்குநருமான வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று விருதை வழங்கி கௌரவித்தார். 

இதையடுத்து முரசொலி அலுவலகம், கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்த உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT