முகப்பு
தமிழ்நாடு

வியாபாரி வீட்டில் ரூ.5.9 லட்சம் திருட்டு

சென்னை ஓட்டேரியில் வியாபாரி வீட்டில் ரூ.5.9 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

சென்னை ஓட்டேரியில் வியாபாரி வீட்டில் ரூ.5.9 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓட்டேரி மங்கலபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. அலாவுதீன் (52). பழைய கட்டடங்களை இடித்து அகற்றும் தொழில் செய்து வருகிறாா். அலாவுதீன் வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை, வெளியூா் சென்றிருந்த அலாவுதீனின் இளைய மகன் தஸ்தகீா் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த ரூ.5.9 லட்சம் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →