முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. 

தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது. நேற்று வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்பட்டது., ஒரு கிராம் தங்கம் ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று வெள்ளிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 1.50 காசுகள் அதிகரித்து, ரூ.68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 அதிகரித்து, கிலோ ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,760

1 பவுன் தங்கம்............................... 38,080

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000

முழு கட்டுரையைப் படிக்க →