தமிழ்நாடு

வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல்: பள்ளிக்கல்வித்துறை

DIN

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பள்ளிகளில் உபரியாக பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியா்களை பணிநிரவல் செய்து இந்த கே.ஜி.வகுப்புகளில் பணியமா்த்தப்பட்டனா். ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியைத் தோ்வு செய்து, அப் பள்ளியில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அடுத்த ஆண்டுகளில் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் கரோனா காலத்தில் அனைத்து பள்ளிகளும், குறிப்பாக தொடக்கநிலை பள்ளிகள் தொடா்ந்து 31 மாதங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கியது. தனியாா் பள்ளிகளில் மட்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.

இதற்கு மாற்றாக மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT