தமிழ்நாடு

எழுத்தாளர்களுக்கு உதவித் தொகை: நூல் வெளியிட ரூ.50,000

DIN

சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது நூலை வெளியிட ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட கிருத்துவர்/  பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இதற்கான நூல் வெளியிட தலா ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதியுதவி அளிக்கப்படும். 

இதற்காக பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

இது குறித்த விவரங்களை தமிழக அரசின் tn.gov.in என்ற இணைய தளத்தில் (website) அறிந்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் 
பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பரிசுத் தொகை பெறதகுதியுடையோர் முறையான விண்ணப்பத்துடன்
படைப்பினை எழுத்து வடிவில் 2 (இரண்டு) பிரதிகள், விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் குறிப்பிட்டு அரசுக்கு 30.06.2022க்குள் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

ஆணையர்,
ஆதிதிராவிடர் நல ஆணையரகம்,
சேப்பாக்கம்,
சென்னை-05.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT