தமிழ்நாடு

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் புதிதாக 5,233 பேருக்கு தொற்று

DIN


புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று ஒரே தொற்று பாதிப்பு 3,714 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,90,282 ஆக உள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 28,857 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.07 சதவிகிதமாக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 7 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,715 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,21 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 3,345 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,36,710 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.72 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 14,94,086 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,94.43,26,416 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT