தமிழ்நாடு

புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கும்பாபிஷேக விழா

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்திலுள்ள பழமையான ஸ்ரீ ‌சக்தி மாரியம்மன் கோயில், ரூ.50 லட்சம் செலவில் நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

இரு தினங்களாகயாக வேள்வி பூஜை நடத்திய வேத விற்பனர்கள், வியாழக்கிழமை காலை கங்கை, காவிரி புனித நீர் ஊற்றி  கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த விழாவில், வாழப்பாடி புதுப்பாளையம் சிங்கிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.

கிராமிய சேர்வை நடனம் ஆடி மகிழ்ந்த இளைஞர்கள்

அனைத்துக்கட்சி அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் பலரும் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

கும்பாபிஷேகத்தையொட்டி பாரம்பரிய தாரை, தம்பட்டை, மேளவாத்தியம் முழங்க இளைஞர்கள் கிராமிய சேர்வை நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT