சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் எஸ்.கரிசல்குளத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கேட்ட வரம் தரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வைகாசி பால்குட உற்சவம் மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி காப்புக்கட்டி, விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க பால்குடம் சுமந்து கோயிலுக்கு சாமியாடிபடி ஊர்வலமாக வந்தனர். அதன்பின்னர் மாரியம்மன் சன்னதியில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது.
பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் மூலவர் முத்துமாரி அம்மனுக்கு புனித நீராலும், பால், திரவிய பொருள்கள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர். மதியம் கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி செர்டு எல்.பாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.