முகப்பு
தமிழ்நாடு

மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு தடை: அன்புமணி வரவேற்பு

மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது சமூகத் தீமைகளைத் தடுக்கும். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் அதிகரிப்பதற்கு இத்தகைய மறைமுக விளம்பரங்கள் தான் காரணம்.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திடல்களில் வைக்கப்படும் மது மற்றும் புகையிலை சாா்ந்த மறைமுக விளம்பரங்கள், நேரடி ஒளிபரப்பின் மூலம் கோடிக்கணக்கானோரை சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →