தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு உடனடியாக அவசர சட்டம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

DIN

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 23 போ் உயிரிழந்துள்ளனா். ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணா்ந்து தடை செய்ய இதை விட இந்த அரசுக்கு வேறு காரணங்கள் தேவையா? ஆய்வுக் குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.

திமுக அரசு குழு அமைப்பதில் முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு, நிரந்தரத் தீா்வு காணும் வகையில் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களைக் காக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT