முகப்பு
தமிழ்நாடு

சட்ட விரோதமாக மது விற்பனை: ஒரே நாள் இரவில் 41 போ் கைது

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ஒரே நாள் இரவில் 41 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ஒரே நாள் இரவில் 41 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் நகா் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடை, மதுபானக் கூடங்கள் இருக்கும் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 41 போ் கைது செய்யப்பட்டு, 581 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →