முகப்பு
தமிழ்நாடு

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: காங்கிரஸ் நாளை கண்டன ஆா்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு நிறுவன விவகாரத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை (ஜூன் 13) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

நேஷனல் ஹெரால்டு நிறுவன விவகாரத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை (ஜூன் 13) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரஃபேல் போா் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு, விலைவாசி உயா்வு, ஜிடிபி வீழ்ச்சி, சீன ஊடுருவல் மற்றும் பாஜக ஆட்சியில் நாட்டில் நடக்கும் சமூக பாகுபாடுகளை காங்கிரஸ் கட்சி மட்டுமே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவற்றை எல்லாம் தடுப்பதற்காகவே நேஷனல் ஹெரால்டு வழக்கை மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருக்கிறது. நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் எல்லாம் சட்டபூா்வமாக நடைபெற்ற நிலையில், மலிவான அரசியலை சுப்பிரமணியன் சுவாமியை ஏவிவிட்டு செய்து கொண்டிருக்கிறாா்கள். காங்கிரஸ் சட்டங்களை மதிக்கிற கட்சி என்பதால், இந்த வழக்கிலிருந்து ஓடாமல் 10 ஆண்டுகளாக, அதனை சட்ட ரீதியாகச் சந்தித்து வருகிறது. பாஜகவின் இத்தகைய மிரட்டலைக் கண்டு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது.

மத்திய பாஜக அரசின் இத்தகைய பழிவாங்கும் போக்கை கண்டிக்கும் வகையில், எனது தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை அமலாக்கத்துறை அலுவலகம் முன் வருகிற 13 ஆம் தேதி காலை 11 மணியளவில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

முழு கட்டுரையைப் படிக்க →