தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை: ரூ.7.50 லட்சம் அபராதம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 14 வகையான நெகிழிப் பொருள்கள் விற்பனை, விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இவ்வகையான தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, அடையாறு மண்டாலம் வாா்டு பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. இதில், நெகிழிப் பொருள்களை வைத்திருந்த வணிக நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 வரை 5,834 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 2,183 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.