சென்னை: சென்னை பிராட்வேயில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை பிராட்வேயில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை பிராட்வேயில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும் போது பணியில் இருந்த தலைமைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.
இதையும் படிக்க.. பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்
என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 2 மாதம் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.