மருத்துவத் துறை முதன்மைச் செயலராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக மாற்றம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: மருத்துவத் துறைச் செயலர் பி. செந்தில் குமார்

தமிழ்நாடு மருத்துவத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

DIN


தமிழ்நாட்டில் ஒரேநாளில் சுமார் 50 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வணிக வரிகள் துறை ஆணையாளராக இருந்த கே. பணீந்திர ரெட்டி உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த எஸ்.கே. பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மருத்துவத் துறை முதன்மைச் செயலராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். சுகாதாரத் துறை சிறப்புப் பணி அதிகாரியாக இருந்த பி. செந்தில் குமார் மருத்துவத் துறை முதன்மைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்யப்படும் மிகப் பெரிய அளவிலான அதிகாரிகள் மாற்றங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT