தமிழ்நாட்டில் புதிதாக 255 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 255 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 255 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த மூன்று பேர் உள்பட மொத்தம் 255 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 134 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,57,637 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34,18,159 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | யூடியூபரின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
புதிதாக உயிரிழப்புகள் பதிவாகாததால் மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் 1,453 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
அதிகளவாக சென்னையில் 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 44 பேருக்கும், கோவையில் 14 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும், திருவள்ளூரில் 16 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.