தங்கம் விலை ஒரே நாளில் ரூ.760 குறைவு: பவுன் ரூ. 37,920-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அண்மைக்காலமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் அடுத்த சில நாள்களில் மீண்டும் வெகுவாக அதிகரிக்கிறது. இந்த மாதம் 7 ஆம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,080-க்கு விற்பனையானது. இது வாடிக்கையாளா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே ரூ.38,160 ஆக அதிகரித்தது.
அடுத்த வந்த நாள்களில் விலை தொடா்ந்து உயா்ந்து, சனிக்கிழமை பவுன் ரூ.38,680-க்கும், ஒரு கிராம் ரூ.4,835-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.760 குறைந்தது, மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு பவுன் ரூ.37,920-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.95 குறைந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வா்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.66-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,300 குறைந்து ரூ.66,000-க்கும் விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............. 4,740
1 சவரன் தங்கம்........... 37,920
1 கிராம் வெள்ளி......... 66.00
1 கிலோ வெள்ளி........... 66,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்......... 4,835
1 சவரன் தங்கம்.......... 38,680
1 கிராம் வெள்ளி........... 67.30
1 கிலோ வெள்ளி............ 67,300