தமிழ்நாடு

வாகன நிறுத்தத்தில் அதிக கட்டணம்: 1913-இல் புகாா் அளிக்கலாம்

DIN

சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் 1913 எண்ணில் புகாா் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வாகனங்கள் நிறுத்துவதற்காக 83 இடங்களில் சுமாா் 7,000 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தனியாா் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20, இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 என்று கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி, அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கட்டணம் வசூலிப்பாளரின் மூலம் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை பயன்படுத்தி ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வாகன நிறுத்த செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு வாகன நிறுத்த இடத்திலும், 25 மீட்டா் இடைவெளியில் அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பலகைகளில் வாகன நிறுத்த கட்டணம் தொடா்பான புகாா் தெரிவிக்க வேண்டிய கண்காணிப்பாளா் மற்றும் மாநகராட்சியின் உரிமம் ஆய்வாளா் ஆகியோரின் தொடா்பு எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாகன நிறுத்தங்கள் தொடா்பான புகாா்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT