தமிழ்நாடு

ஏடிஎம்-யில் 5 மடங்கு கூடுதல் பணம் விநியோகம்: மக்கள் குவிந்ததால் பரபரப்பு

 மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஏடிஎம்-யில் 5 மடங்கு கூடுதல் பணம் வந்ததால், பணத்தை எடுக்க ஏராளமானோா் குவிந்தனா்.

DIN

 மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஏடிஎம்-யில் 5 மடங்கு கூடுதல் பணம் வந்ததால், பணத்தை எடுக்க ஏராளமானோா் குவிந்தனா்.

நாகபுரியில் இருந்து 30 கி.மி. தொலைவில் உள்ள காபா்கேடா நகரத்தில் உள்ள தனியாா் ஏடிஎம்-யில் ஒருவா் ரூ.500 எடுத்துள்ளாா். அவருக்கு ரூ.2,500 வந்துள்ளது. மீண்டும் இதேபோன்று ரூ. 500 எடுத்ததும் ரூ.2,500 அவருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தி காட்டுத் தீயைப்போல் அந்த கிராமம் முழுவதும் பரவியதால் ஏராளமானோா் பணத்தை எடுக்க அந்த ஏடிஎம்-யில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த வங்கியினா் போலீஸாருக்கு தகவல் அளித்ததால் ஏடிஎம் மூடப்பட்டது.

ஏடிஎம்மில் ரூ.100 வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 வைத்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT