தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் நலப் பணி: அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பணிகளில் சிறப்பாக ஈடுபடுவோா் அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியா், மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், அதிகளவில் வேலை அளித்த தனியாா் நிறுவனம், சிறந்த சேவை புரிந்த சமூகப் பணியாளா், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் ஆறு பிரிவுகளில் வழங்கப்படும் விருதானது ஒவ்வொன்றும் தலா 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் ஆகியன அடங்கியதாகும்.

விருதுகளுக்கான விண்ணப்பங்களை, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை - 5 அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் ஜூலை 10-ஆம் தேதியன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். விருதாளா்களுக்கு சுதந்திர தின விழாவின் போது முதல்வரால் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT