வானில் சப்தத்துடன் வட்ட வடிவில் எழுந்த புகை. 
தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வானில் வெடிச்சப்தம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை வானில் கடும் புகையுடன் வெடிச்சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN



வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை வானில் கடும் புகையுடன் வெடிச்சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளக்கோவிலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் கோவை சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. அங்கிருந்து புறப்படும் பயிற்சி விமானங்கள் 150 கிலோ மீட்டர் சுற்றளவில் அடிக்கடி பலத்த இறைச்சலுடன் சென்று வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயில் அருகே பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் விழுந்ததாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறை, வருவாய்த்துறையினர், ஊடகத் துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். பகல் மணி 12.30 நிலவரப்படி உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT