தமிழ்நாடு

“அக்னிபத்” திட்டத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு

DIN

அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 

அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் பணியமா்த்தப்படுவா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த வயது உச்சவரம்பு 23-ஆக அதிகரிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் 3ஆவது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உச்சபட்ச தியாகத்தை கோரும் இராணுவ பணியினை எந்தவித வேலை பாதுகாப்பும் இல்லாமல் மேற்கொள்ள இளைஞர்களை அழைப்பது பெருங்குற்றம். தேசத்தின் பாதுகாப்பையும், இராணுவத்தின் தீரத்தையும் ஒரு சேர அவமதிக்கும் “அக்னிபத்” திட்டத்தை திரும்பபெறுக. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT