ஜூன் 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 22-வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 22-வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை,திருப்பூா், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களின் சில பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 19) முதல் ஜூன் 22-வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரை, திருப்பத்தூரில் தலா 80 மி.மீ., சோலையாா், கரூா் பரமத்தியில் தலா 70 மி.மீ., முசிறி, கரூரில் தலா 60 மி.மீ.,பெரியகுளம், எருமைப்பட்டி, ஆத்தூரில் தலா 50 மி.மீ.மழை பதிவானது.