முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டு: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த அன்புமணி வலியுறுத்தல்

மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகம் உறுதியாக இருக்கும் நிலையில், சட்டப் போராட்டத்தைத் தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகம் உறுதியாக இருக்கும் நிலையில், சட்டப் போராட்டத்தைத் தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேக்கேதாட்டு குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீா்வள அமைச்சகம் ஆகியவற்றிடம் தமிழக அரசு முறையிட்ட பிறகும், பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதிய பிறகும் கூட்டத்தில் விவாதித்தே தீருவோம் என்று ஆணையத் தலைவா் ஹல்தா் தமிழகத்துக்கு வந்து கூறுகிறாா். இதன் மூலம் இந்த விவகாரத்தில் கா்நாடகம், காவிரி ஆணையம், நீா்வள அமைச்சகம் ஆகியவை எவ்வளவு உறுதியாக உள்ளன என்பதை அறியலாம்.

அதனால், மத்திய நீா்வள அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையிலான சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்கள் தில்லி சென்று சந்திப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், சட்டப்போராட்டத்தையும் தீவிரப்படுத்த வேண்டும்.

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கை உடனடியாக விசாரணைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

முழு கட்டுரையைப் படிக்க →