முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
கோப்புப் படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 686 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 3 பேர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,61,560 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 257 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,19,583 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,951 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

அதிகளவாக சென்னையில் 294 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும், திருவள்ளூரில் 50, பேருக்கும், கன்னியாகுமரியில் 47 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், கோவையில் 24 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.