கோப்புப் படம். 
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: 90.07% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  

DIN

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  

தமிழகம், புதுச்சேரியில் 90.07 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9,12,620 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 4.27 லட்சம்(94.38%) பேர் மாணவிகள், 3.94 லட்சம் (85.83%) பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து பாடங்களிலும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதம், அதற்கு அடுத்தப்படியாக பெரம்பலூர் 97.15 சதவீதம், விருதுநகர் 95.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 866 அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT