தமிழ்நாடு

10, 12 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி

DIN

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ள நிலையில், வழக்கமாக இந்தாண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். 

இன்று காலை 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித்துறையால் இன்று வெளியிடப்பட்ட நிலையில், 10-ம் வகுப்பில் 90.70 சதவீத தேர்ச்சியும், 12-ம் வகுப்பில் 93.76 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், 

10,12-ம் வகுப்புகளில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 

12-ம் வகுப்புத் தேர்வில் 4.06 லட்ச மாணவிகள் (96.32) சதவீத தேர்ச்சியும், 3.49 லட்ச மாணவர்கள் (90.96) சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. இதில், பெரம்பலூர் 97.95 சதவீத தேர்ச்சியும், விருதுநகர் 97.2 சதவீதமும், ராமநாதபுரம் 97.02 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்புக்கு 97.22 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 97.15 சதவீதமும், விருதுநகர் 95.96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்தாண்டு 10-ம் வகுப்பு அறிவியல் பாடங்களில் அதிகமானோர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மொத்தம் 3,841 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் ஒரு மாணவர் மட்டும் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 

12-ம் வகுப்பில் வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 4,634 மாணவர்கள் முழு மதிப்பெண்களும், உயிரி வேதியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம் மற்றும் மேம்பட்ட மொழி (தமிழ்) ஆகியவற்றில் எந்த சதவீத மதிப்பெண்களும் பதிவு செய்யப்படவில்லை.

மாணவர்கள் மன உளைச்சல் ஏற்பட்டால் 14417 மற்றும் 1098 என்ற ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தனி கால் சென்டர் உள்ளதால், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பயன்படுத்தி, கலந்தாய்வு நடத்தலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

உக்ரைன் எல்லையை ஆக்கிரமிக்கும் ரஷிய படைகள்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

SCROLL FOR NEXT