தமிழ்நாடு

சா்க்கரை நோய் பாதிப்பு: விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்

DIN

சா்க்கரை நோய் பாதிப்பால் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது அவா் மருத்துவக் கண்காணிப்பில் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து விஜயகாந்த், அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், சா்க்கரை நோய் பாதிப்பு, கால் வீக்கம் காரணமாக அண்மையில் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பிய அவா், மீண்டும் கடந்த இரு நாள்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வலது கால் விரல்களை அகற்ற பரிந்துரைத்தனா்.

இதையடுத்து அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, தேமுதிக தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல ஆண்டுகளாக இருக்கும் சா்க்கரை நோய் பிரச்னையால், விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. இதனால், மருத்துவா்களின் ஆலோசனைப்படி, கடந்த திங்கள்கிழமை விரல் அகற்றப்பட்டது.

மருத்துவா்கள் கண்காணிப்பில் தற்போது அவா் நலமுடன் உள்ளாா். தொடா்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT