மதுரை பொன்மேனி பிரதான சாலையில் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மதுரை பொன்மேனி பிரதான சாலையில் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மதுரை 68வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி பிரதான சாலையில் சுமார் 4 அடிக்கு மேல் மண்சரிவு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக மதுரை பொன்மேனி பிரதான சாலை அதிகமான குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும் சாலை நிலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மேலும் விபத்து ஏற்படாதவாறு, பள்ளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் பள்ளம் விழுந்த இடத்தில் தற்போது மாநகராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.