சபரிநாதன் 
தமிழ்நாடு

கோவையில் பிளிப்கார்ட் நிறுவன டெலிவரி ஊழியர் கார் மோதி பலி: விடியோ வெளியீடு

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த "பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்" மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

DIN

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த "பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்" மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம், ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சபரிநாதன் (21). ஐடிஐ படித்த சபரிநாதன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில், ஆலந்துறை பகுதியில் உள்ள  "பாலசுப்பிரமணியம் கடை" அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு வந்த பார்சலை டெலிவரி செய்ய சபரிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, கோவையிலிருந்து சிறுவாணி நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று, சாலையோரம் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்த சபரிநாதன் மீது மோதியது. இதில், சபரிநாதன் தூக்கி எறியப்பட்டதில் தலை மற்றும் கை,கால்களில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சபரிநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து சாமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், சபரிநாதன் தந்தை மணி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காரைக் அதி வேகமாக ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே அதிவேகமாக வந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT