சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சாம்பலுடன் தண்ணீர் ஓடை போல ஓடி சங்கிலி முனியப்பன் கோவில் அருகே காவிரியில் நேரடியாக கலக்கிறது. 
தமிழ்நாடு

மேட்டூர் சாம்பல் ஏரியில் உடைப்பு... காவிரியில் குடிநீர் மாசடையும் அபாயம்!

மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த நீர் காவிரியில் கலப்பதால் குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

DIN

மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த நீர் காவிரியில் கலப்பதால் குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். 

மின் உற்பத்திக்காக எரியூட்டப்படும் நிலக்கரி சாம்பல் உலர் சாம்பலாகவும், ஈரசாம்பலாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அனல்மின் நிலைய சாம்பல் சிமென்ட் உற்பத்திக்கும் செங்கல் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் ஏரி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செங்கல் மற்றும் சிமென்ட் உற்பத்திக்கு லாரிகள் மூலம் சாம்பல் கொண்டு செல்லப்படுகிறது. 

தற்போது, சாம்பல் விலை உயர்த்தப்பட்டதால் மேட்டூர் அனல்மின் நிலைய சாம்பல் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போனது. இதனால் விற்பனைக்கு போக மீதமுள்ள சாம்பல் நீரில் கரைக்கப்பட்டு மேட்டூர் அனல் மின் நிலையத்தின் பின்புறத்தில் உள்ள சாம்பல் ஏரியில் நிரப்பப்பட்டு வருகிறது.

சாம்பல் ஏரிகள் நிரம்பியதால் தாழையூரை ஒட்டியுள்ள சாம்பல் ஏரியில் லேசான உடைப்பு ஏற்பட்டு சாம்பலுடன் தண்ணீர் ஓடை போல ஓடி சங்கிலி முனியப்பன் கோவில் அருகே காவிரியில் நேரடியாக கலக்கிறது.

சாம்பல் நீர் பிஎன் பட்டி பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் எடுக்கும் ஆள்துளை கிணறு வழியாகவும் செல்கிறது. இதனால் கிணற்று நீர் மாசடைகின்றது. சாம்பல் நீர் நேரடியாக காவிரியில் கலப்பதால் காவிரி நீரும் மாசடைகிறது.

சாம்பல் நீர் நேரடியாக காவிரியில் கலப்பதால் மாசடையும் காவிரி நீர்.

இங்கு காவிரியில் மேட்டூர் ஆத்தூர் குடிநீர் திட்டம், கோனூர் கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது குடிநீரில் சாம்பல் நீர் கலந்து செல்ல வாய்ப்புள்ளது. இதனால் உடனடியாக ஏரியின் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சாம்பலுடன் தண்ணீர் ஓடை போல ஓடி சங்கிலி முனியப்பன் கோவில் அருகே காவிரியில் நேரடியாக கலக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT