தமிழ்நாடு

ஜூலை 11இல் மீண்டும் அதிமுக பொதுக்குழுக் கூட்டம்

அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11இல் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.

DIN

அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11இல் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.

மேலும், ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்தோடு அடுத்த பொதுக் குழு நடைபெறும். அந்த பொதுக் குழுவில், ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்துடன் இணைத்து இந்த 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் வழங்கிய சி.வி.சண்முகம் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனவும், இரட்டைத் தலைமையை நிராகரித்து ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11இல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேங்காய் மதிப்பு கூட்டுதல், பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஓடிடியில் இட்லி கடை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அணி விவரம்...

SCROLL FOR NEXT