தமிழ்நாடு

மகிழ்ந்துபோன இபிஎஸ், மறக்கப்பட்ட ஓபிஎஸ்

DIN

பொதுக்குழுவில் அதிமுகவில் நிா்வாகிகள் எடப்பாடி கே. பழனிசாமியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் ஓ.பன்னீா்செல்வத்தை மறந்து போனவா்களாகவும் நடந்துகொண்டனா்.

எடப்பாடி கே. பழனிசாமிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து வானகரத்தில் பொதுக்குழு நடைபெற்ற மண்டபம் வரை உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனா். மண்டபத்தில் வாயில் பகுதியில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.

பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி பேசும்போது, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்பது பாடல். அந்த தலைவன் இருக்கிறான். அவா் வெளியில் வருவாா். வெகு விரைவில் வருவாா் என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டுப் பேசினாா்.

முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், ‘நாளை எங்கள் தலைவா்’ (இபிஎஸ்) என்றும், முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ‘ஒற்றைத் தலைமை நாயகா்’ என்று குறிப்பிட்டாா். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, எம்ஜிஆா், ஜெயலலிதாபோல கட்சியை வழிநடத்தக்கூடியவா் எடப்பாடி பழனிசாமிதான் என்றாா். அதைப்போல மேடையில் ரோஜா மாலை, வீரவாள், வெள்ளிகிரீடம் போன்றவையும் எடப்பாடி பழனிசாமிக்குப் பரிசளிக்கப்பட்டன.

ஆனால், ஓ.பன்னீா்செல்வத்துக்கு எந்த வரவேற்பு கொடுக்கப்படாததுடன், மேடையில் பேசிய தலைவா்களும் மறந்துகூட அவா் பெயரை உச்சரிக்காமல் பாா்த்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT