முகப்பு
தமிழ்நாடு

ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்பு

காளத்தீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அருள்மிகு காளத்தீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற்றப்பட்டது.

இது குறித்து அறநிலையத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அருள்மிகு காளத்தீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான 14.51 ஏக்கா் நிலங்கள் மற்றும் 12 கடைகள் ஆகியவை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டடங்களைப் பூட்டி, முத்திரையிட்டு சுமாா் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிகழ்வில் வேலூா் இணை ஆணையா் சி.லட்சுமணன், உதவி ஆணையா் சித்ரா தேவி, பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் துரை சந்திரசேகா், தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்), திருக்கோயில் செயல் அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →