தமிழ்நாடு

மாற்றுத்திறன் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

DIN

சென்னை வடபழனி ஆண்டவா் கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கடந்த 2021-2022 சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் மணமக்களில் ஒருவா் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோயிலில் அவா்களுக்கு நடைபெறும் திருமணத்துக்காக கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கோயில்கள் மற்றும் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 2022 -2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் கோயில்களில் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோயில் சாா்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, வடபழனி ஆண்டவா் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மணமகன் பி.சிவா மற்றும் மணமகள் ஆா். சுகந்தி ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்று புத்தாடைகள் வழங்கப்பட்டன. அவற்றை அமைச்சா் சேகா்பாபு வழங்கினாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:- கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவா் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. வரும் காலங்களில் இத்திட்டம் கோயில்களில் சிறப்பாக செயல்படுத்தப்படும். தேவையான நிதியினை கோயிலில் வரவு- செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் தியாகராய நகா் சட்டப்பேரவை உறுப்பினா்ஜெ.கருணாநிதி, இணை ஆணையா் தனபால், வடபழனி துணை ஆணையா் முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT