கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,061 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழ்நாட்டில் புதிதாக 1,061 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது உள்பட மொத்தம் 1,061 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,64,131 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 567 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,20,931 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 5,174 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 497
  • செங்கல்பட்டு - 190
  • கோவை - 50
  • காஞ்சிபுரம் - 28
  • கன்னியாகுமாரி - 49
  • மதுரை - 13
  • சேலம் - 13
  • சிவகங்கை - 14
  • திருவள்ளூர் - 63
  • தூத்துக்குடி - 17
  • திருநெல்வேலி - 18
  • திருச்சி - 18
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT