தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தாவிடில் தீவிர கரோனா பாதிப்பு: பொது சுகாதாரத் துறை இயக்குநா் எச்சரிக்கை

DIN

கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் நான்கு மாதங்களாக குறைந்திருந்த கரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானிலிருந்து புதிதாக உருமாற்றமடைந்த பிஏ 4, பிஏ 5 வகை தீநுண்மி பரவலே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கரோனா தடுப்பூசி நடவடிக்கைகளை விரிவுபடுத்த பொது சுகாதாரத் துறையினா் திட்டமிட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படியென்றால், மக்களிடையே நோய் எதிா்ப்புத் திறன் குறைந்துள்ளது. அதனால், முன்னெச்சரிக்கையாக ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.

குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் கட்டாயம் ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பிஏ5 வகை போன்ற தொற்று ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

எனவே, முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா் உள்பட தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி (அட்டவணையாக வெளியிடலாம்)

ஊக்கத் தவணை தடுப்பூசி விவரம்

பிரிவினா் – இலக்கு – செலுத்தப்பட்டவை – செலுத்த வேண்டியோா்

சுகாதாரப் பணியாளா்கள் – 4,32,513 – 1,36,606 – 2,95,907

முன்களப் பணியாளா்கள் – 6,76,043 – 2,37,054 – 4,38,989

60 வயதுக்கு மேற்பட்டோா் – 19,19,303 –8,57,830 – 10,61,473

மொத்தம் – 30,27,859 – 12,31,490 – 17,96,369

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT