முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,382 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,382 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:37 AM
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,382 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக ஆண்கள் 759, பெண்கள் 623 என மொத்தம் 1,382 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 607 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 22,169 போ் குணமடைந்துள்ளனா். சனிக்கிழமை மட்டும் 617 போ் குணமடைந்தனா். தொற்று பாதிப்பால் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு 1,359 ஆகவும், சென்னையில் 616 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. வெள்ளி, சனி என அடுத்தடுத்த நாள்களில் தொற்று பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.