தமிழ்நாடு

தில்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது: ஓ.பன்னீா்செல்வம்

DIN

தில்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவின் பொதுக்குழுவுக்குப் பிறகும் முடிவடையாமல் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீா்செல்வம் தில்லி சென்றிருந்தாா். தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முா்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்றாா்.

இதற்கிடையில், தில்லியில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழுவை ஜூலை 11-இல் கூட்ட அனுமதிக்கக்கூடாது என்று ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் வைத்திலிங்கம், தோ்தல் ஆணையத்தில் மனு எதுவும் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தாா்.

இந்த நிலையில் தில்லியிருந்து ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை சென்னைக்கு திரும்பினாா். விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா், ‘தில்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT