செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

தொண்டர்கள் என் பக்கம்; சதிவலை விரைவில் அவிழும்: ஓபிஎஸ்

தொண்டர்களுக்காக நான் தொண்டர்களுக்காகவே நான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

DIN

தொண்டர்களுக்காக நான் தொண்டர்களுக்காகவே நான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தில்லியிலிருந்து சென்னை வழியாக மதுரை சென்ற ஓபிஎஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 

''எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்  மக்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். இன்று இருக்கின்ற அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டது. யாரால் சதி வலை பின்னப்பட்டது என்பது எனக்குத் தெரியும். அவை கூடிய விரைவில் மக்களுக்கும் தெரிய வரும். அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் மக்கள் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். 

ஜெயலலிதா இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தொண்டரைப் பெற்றது எனது பாக்கியம் என ஜெயலலிதா சான்றிதழ் கொடுத்துள்ளதே எனக்கு பெருமை.  எனது எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் நிர்ணயிப்பார்கள் எனக் குறிப்பிட்டார். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளது'' குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

SCROLL FOR NEXT