ஜெயக்குமார் 
தமிழ்நாடு

அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார்: ஜெயகுமார் பேட்டி

ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

DIN


ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றது. 

பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிர்வாகிகளின் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது என தெரிவித்தார். 

மேலும், ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளார். ஓட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான். 

துரோகம் அவரது உடன் பிறந்த ஓன்று. தூங்குவதுபோல் பன்னீர்செல்வம் நடிக்கிறார். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மாறிவிட்டார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜெயகுமார் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT