ஓ.பன்னீா்செல்வம் 
தமிழ்நாடு

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக திங்கள்கிழமை அதிமுக தலமைமை அலுவலகத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

DIN

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக திங்கள்கிழமை அதிமுக தலமைமை அலுவலகத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்னை அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இருவரது பெயரும் இல்லாமல் முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிா்வாகிகள் கூட்டம் என அதிமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. 

தலைமைக் கழக நிா்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. தலைமைக் கழக நிா்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய அறிவிப்பு அதிமுகவினரையும், அதன் நிா்வாகிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், திங்கள்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக அவசர ஆலோசனை நடத்திவிட்டு அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளார். 

இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள தலைமைக் கழக நிா்வாகிகள் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை நியமிப்பதும் குறித்தும் ஆலோசிக்கப்படும்.  

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்த நீக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இன்று திங்கள்கிழமை நடைபெறும் கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பெருமளவிலான அதிமுகவினர் வருகை தந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை - இயக்குநர்... வரலட்சுமி வெளியிட்ட புதிய விடியோ!

அசோக் லேலேண்ட் 3 வது காலாண்டு லாபம் 5.19% அதிகரிப்பு!

கலந்தாய்வு முடிந்தும் பணி ஆணை கிடைக்காமல் தவிக்கும் 1,429 சுகாதார ஆய்வாளர்கள்!

ஆப்கன் vs புரோட்டீஸ்! டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தலைசிறந்த ஆட்டம்!!

ஆதாரமற்ற குற்றச்சாட்டு! ராகுலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் | செய்திகள்: சில வரிகளில் | 11.02.26

SCROLL FOR NEXT