இருசக்கர வாகனத்தில் பாம்பு: திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு (விடியோ)
வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில், நல்ல பாம்பு புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில், நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் தினேஷ்குமார். இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தபோது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் வண்டியை நிறுத்தி பார்த்தபோது, அதில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக திருவிடைமருதூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த விடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.